< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
குத்தாலம், பாலையூர் பகுதிகளில் 6-ந் தேதி மின் நிறுத்தம்
|4 Oct 2022 12:15 AM IST
குத்தாலம், பாலையூர் பகுதிகளில் 6-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
குத்தாலம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் 6-ந்தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் 6-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) கலியபெருமாள் கூறினார்.