< Back
மாநில செய்திகள்
சாமியார்பேட்டையில்  சுருக்குமடி வலைக்கு எதிராக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்  மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
கடலூர்
மாநில செய்திகள்

சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தினத்தந்தி
|
7 July 2022 10:50 PM IST

சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக நாளை மறுநாள் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனா்.


பரங்கிப்பேட்டை,

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிராக, மீனவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறக்கு தளத்தில் நடைபெற்றது.

இதற்கு விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சுருக்குமடி வலை தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை, எனவே சுருக்குமடி வலைக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்க கோரி சாமியார் பேட்டையில் நாளை(சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, மேலும் அன்றைய தினம், மீனவ கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றுவது, அதேபோல் படகுகளிலும் கருப்பு கொடி ஏற்றுவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், உள்ளூர் மீனவர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்