< Back
மாநில செய்திகள்
மேயருக்கு கொடுத்த அரசு வாகனத்தில் குடும்பத்தினரோடு ஷாப்பிங் - வெளியான பரபரப்பு காட்சி
மாநில செய்திகள்

மேயருக்கு கொடுத்த அரசு வாகனத்தில் குடும்பத்தினரோடு ஷாப்பிங் - வெளியான பரபரப்பு காட்சி

தினத்தந்தி
|
17 March 2023 3:12 PM IST

மேயருக்கு கொடுத்த அரசு வாகனத்தில் குடும்பத்தினரோடு ஷாப்பிங் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயகுமார். அவரது குடும்பத்தினர் திருவள்ளூரில் உள்ள தனியார் துணிக்கடையில் மேயருக்கென்று வழங்கப்பட்ட அரசு வாகனத்தை எடுத்து வந்து சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியது தெரியவந்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அரசு வாகனங்களை அவரது குடும்பத்தினர் சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு வலம் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அரசு வாகனத்தில் மேயர் குடும்பத்தினர் ஷாப்பிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகள்