விருதுநகர்
ரூ.10 லட்சம் பட்டாசுகளுடன் கடைக்கு சீல்
|அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக இருப்பு வைத்த பட்டாசு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சிவகாசி,
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக இருப்பு வைத்த பட்டாசு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் அரசு அனுமதி வழங்கி உள்ள அளவை விட அதிக அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் விபத்து அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து தொடர்ந்து வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதை தொடர்ந்து சிவகாசி தாசில்தார் வடிவேல், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை ஆய்வு தனிதாசில்தார் சாந்தி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் தனித்தனியாக பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.
கடைக்கு சீல்
இதில் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த ரவி மகன் சுதாகர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைகளில் பல தரப்பட்ட பட்டாசுகள் சுமார் 800 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறையினர் அந்த பட்டாசு கடைக்கு சீல் வைக்க மேல் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றனர். பின்னர் தாசில்தார் சாந்தி முன்னிலையில் அந்த பட்டாசு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கடையில் மட்டும் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.