< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
கடையின் பூட்டை உடைத்து திருட்டு
|7 July 2022 8:53 AM IST
கூடுவாஞ்சேரி அருகே கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி குமரன் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 46), இவர் அதே பகுதியில் உள்ள அண்ணா தெருவில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சிவகுமார் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.