< Back
மாநில செய்திகள்
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து   பகுதியில் கடையடைப்பு போராட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து பகுதியில் கடையடைப்பு போராட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தரங்கம்பாடி தாலுகா பகுதியில் கடையடைப்பு போராட்டம்

பொறையாறு:

தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட தரங்கம்பாடி, பொறையாறு, பரசலூர் செம்பனார்கோவில், சங்கரன்பந்தல், இலுப்பூர் திருக்களாச்சேரி,ஆயப்பாடி, காட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தரங்கம்பாடி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொறையாறு பஸ் நிலையத்தில் பயணிகள் இல்லாமல் பஸ்கள் காலியாக சென்றது. பால், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாதாலும், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது இந்த போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்