< Back
மாநில செய்திகள்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கடையடைப்பு போராட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கடையடைப்பு போராட்டம்

தினத்தந்தி
|
29 Aug 2022 8:55 PM IST

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலஅறிவிப்பை வாபஸ் பெறகோரி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள் ஓடவில்லை.

கூடலூர்,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலஅறிவிப்பை வாபஸ் பெறகோரி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள் ஓடவில்லை.

சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு

நாடு முழுவதும் தேசிய வன உயிரின காப்பகத்தின் எல்லையில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் வரை சுற்றுச்சூழல் உணர் திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததுடன், அப்பகுதியில் நிரந்தர கட்டிடங்கள் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பாக மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி உத்தரவிட்டது.

இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தின் எல்லையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கடையடைப்பு போராட்டம்

சுற்றுச்சூழல் மண்டலம் அறிவிப்பை வாபஸ் பெறகோரி கூடலூர், பந்தலூர் தாலுகா அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் 10 ஆயிரம் கடைகளில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை முதல் 24 மணி நேரம் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, ஜீப்புகள், சுற்றுலா வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. கூடலூர் நகரில் ஊட்டி-மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மலப்புரம், வயநாடு செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனிடையே காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

பயணிகள் குறைவு

இதுகுறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டல அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் இனிவரும் நாட்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்