தர்மபுரி
பாலக்கோட்டில்வாடகை செலுத்தாததால் பேக்கரிக்கு `சீல்'
|பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மணிவண்ணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை தற்போது வரை செலுத்தவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே இந்த நிதியாண்டிற்க்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை வசூல் செய்து வரும் நிலையில் நிதியாண்டு இறுதி என்பதால் பேரூராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மணிவன்னன் தனது பேக்கரி கடைக்கு தற்போது வரை வாடகை செலுத்தாததால் நேற்று மாலை பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி கடை ஊழியர்களை வெளியேற்றி பேக்கரியை பூட்டி `சீல்' வைத்தார். அப்போது துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன், மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது