< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்
|23 July 2023 12:30 AM IST
உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்.
இத்தாலியில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகள் நடந்தது. இதில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் கலந்து கொண்டு டிராப் ஆண்கள் தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். இதற்கு முன்பு பிருத்விராஜ் தொண்டைமான் தோகாவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
உலக துப்பாக்கி சுடும் போட்டி தரவரிசையில் பிருத்விராஜ் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறார். பதக்கம் வென்ற பிருத்விராஜை அவரது தந்தையும், புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருமான ராஜகோபால தொண்டைமான், தாய் மற்றும் திருச்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் பாராட்டினர்.