< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிவகங்கை: கொலை வழக்கு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்
|27 Feb 2024 3:08 AM IST
கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையை குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், ரவுடி தினேஷ் குமார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, போலீசாரை பார்த்ததும் ரவுடி தினேஷ் குமார் தப்பியோட முயற்சித்தார். இதையடுத்து, ரவுடி தினேஷ் குமாரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தினேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.