< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மீன் பிரியர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்
|12 Jun 2022 3:05 PM IST
மீன்பிடி தடைகாலத்தின் எதிரொலியாக சென்னை காசிமேட்டில் சிறிய வகை மீண்களின் விலை உயர்ந்து கானப்பட்டது.
சென்னை,
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சென்னை காசிமேடு சந்தையில் மீன் வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர். இந்த நிலையில், மீன்பிடி தடை காலம் இருப்பதன், மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. இதனால், சிறிய ரக மீன்களும் விலையேற்றத்துடன் கானப்படுகிறது.
காசிமேட்டில் வஞ்சிரம் கிலோ 1500 ரூபாய்க்கும், சங்கரா 500- 1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கனவாய் மீன் 600 ரூபாய்க்கும், தோல்பாறை, மடவை தலா 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல கோழிக்கண்டை, ஜிலேபி மீன்கள் கிலோ 100 ரூபாய்க்கும், இறால் மீன் கிலோ 150- 800 வரையிலும், நெத்திலி மீன் கிலோ 200 ரூபாயில் தொடங்கி விற்பனையாகி வருகிறது.