< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
ஆன்லைன் மூலம் ரூ.79 ஆயிரம் கொடுத்து ஆர்டர் கொடுத்தது டிரோன் கேமராவுக்கு, வந்தது பொம்மை கார்
|27 Sept 2022 3:58 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் ஆன்லைனில் ரூ.79 ஆயிரம் கொடுத்து டிரோன் கேமிரா வாங்கிய இளைஞர், பார்சலில் தனக்கு வந்த பொருளைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் (வயது 35). ஏ.சி. மெக்கானிக்கான இவர், தனது நண்பர் சுரேசுக்கு டிரோன் கேமரா தேவைப்பட்டதால் ஆன்லைனில் தேடினார். அப்போது ஆன்லைன் செயலி மூலம் ரூ.79 ஆயிரத்துக்கு கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20-ந் தேதி டிரோன் கேமரா ஆர்டர் செய்தார். நேற்று வந்த கேமரா பார்சலை பிரித்து பார்த்தபோது, ரூ.100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்தவரை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் இது குறித்து ஆன்லைன் நிறுவனத்துக்கு புகார் அளித்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.