< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
வண்டுறை மாரியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா
|18 Feb 2023 12:15 AM IST
வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், லட்சுமி பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் மகா மண்டபத்தில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஞ்சள் விளையாட்டு விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.