< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பாம்பன் கடல் பகுதியில் 3 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்கள்
|10 April 2023 12:15 AM IST
பாம்பன் கடல் பகுதியில் 3 நாட்களுக்கு மேலாக கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கர்நாடக மாநிலம் மங்களூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்று பெரிய மிதவையை இழுத்தபடி பாம்பன் வந்து கடந்த 3 நாட்களுக்கு மேலாக குருசடைதீவு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் மற்றொரு கப்பலும் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக அதே கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாம்பன் குருசடை தீவு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பல்களின் ஆவணங்களை துறைமுக குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்த பின்னர் இன்று அல்லது நாளை துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.