< Back
மாநில செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய 50 சிறை அலுவலர்களுக்கு கேடயம்- புத்தகங்களை படித்த கைதிகளுக்கு பரிசு
மதுரை
மாநில செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய 50 சிறை அலுவலர்களுக்கு கேடயம்- புத்தகங்களை படித்த கைதிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
16 Aug 2023 6:38 AM IST

மதுரை மத்திய சிறையில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய 50 சிறை அலுவலர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் புத்தகங்களை படித்த கைதிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


மதுரை மத்திய சிறையில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய 50 சிறை அலுவலர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் புத்தகங்களை படித்த கைதிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழா

மதுரை மத்திய சிறையில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தேசிய கொடியேற்றினார். பின்னர் அவர் சிறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் கைதிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் சிறை அலுவலர், அதிகாரிகள் மற்றும் கைதிகள் கலந்து கொண்டனர்.

இந்த வாசகர் வட்டம் சிறை கைதிகள் நூல்களை படிப்பதற்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். சிறை கைதிகள் தான் படித்த நூல்களை பற்றி மற்ற கைதிகளுக்கு கதை வடிவில் கூறி அவர்களும், அந்த நூல்களை படிக்க வேண்டும். அதற்கான எண்ணத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட சிறை கைதிகளை பாராட்டும் வகையில் அவர்களுக்கு நேற்று பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

50 சிறை அலுவலர்களுக்கு கேடயம்

மேலும் மதுரை மத்திய சிறையில் விழிப்புடன் மற்றும் சிறப்பாக செயல்பட்ட 50 சிறை அலுவலர்களுக்கு பாராட்டும், பரிசு, கேடயமும் வழங்கப்பட்டது. மத்திய சிறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இசை குழுவிற்கு வைகை சுதந்திர பறவைகள் இசைக் குழு என நேற்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அந்த இசை குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. அப்போது குழுவினர் புதிய வெள்ளை நிற சீருடை, பெல்ட், சூ ஆகியவை வழங்கப்பட்டு அவர்கள் அழகுற காட்சியளித்தனர்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நகைச்சுவை நடிகர் மதுரை முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி அளித்தார். மத்திய சிறையில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சிகளை மதுரை மற்றும் பாளையங்கோட்டை கட்டுப்பாட்டு சிறைகளில் உள்ள அனைத்து சிறைகைதிகளும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை சிறை துறையினர் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்