< Back
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் சஷ்டி விழா
நாமக்கல்
மாநில செய்திகள்

முருகன் கோவில்களில் சஷ்டி விழா

தினத்தந்தி
|
6 July 2022 12:30 AM IST

பரமத்திவேலூர் வட்டாரத்தில் முருகன் கோவில்களில் சஷ்டி விழா நடந்தது.

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஆனி மாத சஷ்டியையொட்டி கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகம் ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் வல்லப விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்