< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
செண்பகவல்லி அம்மன் கோவிலில் சனி பிரதோஷ விழா
|16 July 2023 12:15 AM IST
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சனி பிரதோஷ விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று மாலையில் சனி பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூவனநாத சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைப்பிரியா ஆகியோர் ஏற்பாட்டில் கோவில் ஊழியர்கள் பிரசாதம் வழங்கினர்.