தூத்துக்குடி
கழுகாசலமூர்த்தி கோவிலில் சனி பிரதோஷ விழா
|கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சனி பிரதோஷ விழா நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று ஆனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 7 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு 11 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.