< Back
மாநில செய்திகள்
தோனீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா
தென்காசி
மாநில செய்திகள்

தோனீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா

தினத்தந்தி
|
2 July 2023 1:27 AM IST

மகாதேவர்பட்டி தோனீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நடந்தது.

திருவேங்கடம்:

திருவேங்கடத்தை அடுத்துள்ள கலிங்கப்பட்டி பஞ்சாயத்து மகாதேவர்பட்டியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத தோனீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அகிலாண்டேஸ்வரி அம்பாள், தோனீஸ்வரர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நந்தீஸ்வரருக்கு விபூதி, பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்