ராமநாதபுரம்
கடத்த குவிக்கப்பட்ட மணல்
|கடத்த குவிக்கப்பட்ட மணலை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா பாகனூர் அருகில் உள்ள தோமையார்புரம் விருசுழி ஆற்றுப்படுகையில் ஆற்று மணல் கடத்தும் நோக்கில் அந்த பகுதியில் மணல் அள்ளி குவித்து வைக்கப்பட்டு உள்ளதாக திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் உத்தரவின் பேரில் மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின்பெர்னாண்டோ, வருவாய் ஆய்வாளர் செந்தில்நாதன், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மணலை கைப்பற்றி எந்திரத்தின் உதவியுடன் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை தாழ்வான பகுதியில் நிரப்பி நடவடிக்கை எடுத்தனர். மேலும் அந்த பகுதியில் மணல் கடத்தல் நடைபெறாதவாறு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தாசில்தார் செந்தில் வேல்முருகன் ஆலோசனை வழங்கினார்.