< Back
மாநில செய்திகள்
சக்தி விநாயகர் ஆலய மண்டல பூஜை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சக்தி விநாயகர் ஆலய மண்டல பூஜை

தினத்தந்தி
|
26 Aug 2022 12:15 AM IST

பர்கூரை அடுத்த சக்தி விநாயகர் ஆலயத்தில் மண்டல பூஜை நடந்தது.

பர்கூர்:-

பர்கூரை அடுத்த ராமசாமிநகர் சக்தி விநாயகர் ஆலயத்தின் 25-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து ஆலயத்தில் தினமும் பூஜைகள் நடந்தன. நேற்று 48-வது நாள் மண்டல பூஜை நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, யாக பூஜை, சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கந்திகுப்பம் காலபைரவர் சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தினார். சந்தன காப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்