கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சக்தி பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்
|கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சக்தி பொன்னியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சக்தி பொன்னியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. கடைசி 2 நாள் பகல், இரவு தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் சக்தி பொன்னியம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தேர் இழுக்கப்பட்டது. தேரோட்டம் காரணமாக வெங்கப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சதுரங்கப்பட்டினம் போலீசார் போக்குவரத்தை சீரமைத்து வாகனங்களுக்கு வழி ஏற்டுத்தி கொடுத்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்து அம்மனுக்கு பழங்கள், படையல்கள் வைத்து வழிபாடு செய்து வணங்கினர். விழா ஏற்பாடுகளை வெங்கப்பாக்கம் கிராம மக்கள், பக்தர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.