< Back
மாநில செய்திகள்
குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணி: வெளியில் தங்குவோருக்கு ரூ.24,000 - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணி: வெளியில் தங்குவோருக்கு ரூ.24,000 - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
20 Nov 2022 7:28 AM GMT

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது வெளியில் தங்குவோருக்கு ரூ.24,000 வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வெளியே தங்குவோருக்கு ரூ.24,000 வழங்கப்படும். சிதிலமடைந்த கட்டங்களை இடித்து கட்டித்தர 18 மாதம் ஆகும் என்பதால் வெளியே தங்கவேண்டிய சூழல் உருவாகி உள்ளது. மேலும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் இனி 420 சதுர அடி அளவில் வீடு கட்டித்தரப்படும்.

மருத்துவர்களுக்கு பாதிப்பு உள்ளது போன்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதிப்பு உள்ளது. ஆகையால் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என்றார்.

மேலும் செய்திகள்