தூத்துக்குடி
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தாய்க்கு உதவியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மினி பஸ் டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது
|கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உதவியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மினி பஸ் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உதவியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மினி பஸ் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மினி பஸ் டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள கீழ பாண்டவர்மங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்த கதிர்வேல் மகன் மதன் (வயது 37). மினி பஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
பாலியல் தொந்தரவு
அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உதவியாக இருந்து வந்த 16 வயது சிறுமியிடம் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
அப்போது அந்த சிறுமி அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த மதன் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் கைது
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று மதனை கைது செய்தார்.
அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு மினி பஸ் டிரைவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.