< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாணவனுக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது
|9 July 2024 4:37 AM IST
மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (41 வயது). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்தார். இந்த நிலையில் டியூசன் படிக்க வந்த 9-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவனின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ஆசிரியர் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.