< Back
மாநில செய்திகள்
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை:  தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்   சேலம் கோர்ட்டு தீர்ப்பு
சேலம்
மாநில செய்திகள்

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் சேலம் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
31 Aug 2022 2:20 AM IST

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்,

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பனைமடல் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 33), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி 17 வயதுடைய பிளஸ்-1 படித்த மாணவியின் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக தனபாலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்