< Back
மாநில செய்திகள்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது

தினத்தந்தி
|
23 Feb 2024 7:38 AM IST

‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள கடினல்வயல் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 58). இவர், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியை சேர்ந்த சிறுதலைக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர் 3 மற்றும் 4-ம் வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ஆசிரியர் தர்மலிங்கம் மீது 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்