< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு சிறை தண்டனை
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு சிறை தண்டனை

தினத்தந்தி
|
3 May 2024 1:59 AM IST

முதியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர், வெட்டுக்காடு மேல முத்துடையான்பட்டியை சேர்ந்தவர் முத்து (வயது 69). இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி பள்ளிக்கு செல்லும் போது சைகை காட்டி கேலியும், கிண்டலும் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் முதியவர் முத்துவை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முத்துவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், அத்துமீறி நுழைந்ததற்காக ரூ.1,000 அபராதமும் விதித்தார்.

மேலும் செய்திகள்