< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
அண்ணாநகரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
|24 July 2022 7:58 AM IST
அண்ணாநகரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது தனது மகள் மாயமானதாக பெண்ணின் பெற்றோர் அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், மதுரையை சேர்ந்த சதாம் உசேன் (வயது 21), என்ற வாலிபர் 'இன்ஸ்டாகிராம்' மூலம் சிறுமியிடம் பழகி ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி மதுரைக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து மதுரைக்கு விரைந்து சென்ற போலீசார் சதாம் உசேனை கைது செய்து மாணவியை மீட்டனர்.
விசாரணையில் மாணவியை சதாம் உசேன் கடத்தி சென்று பாலியல் உறவு கொண்டது உறுதியானது. இதையடுத்து இந்த வழக்கு அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், சதாம் உசேன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.