< Back
மாநில செய்திகள்
மாணவிக்கு பாலியல் தொல்லை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
16 Sept 2022 2:28 AM IST

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்

அய்யம்பேட்டை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது நிரம்பிய மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலை 11 மணியளவில் பள்ளியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் மாணவியின் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் தொல்லை

இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் மாணவிக்கு அய்யம்பேட்டை மேலப்பேட்டை தெருவை சேர்ந்த கொத்தனார் கண்ணன்(48) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக பள்ளியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததாகவும் தெரிய வந்தது.

போக்சோ சட்டத்தில் கைது

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்