< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
8 Sept 2022 2:16 PM IST

சூனாம்பேடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் செல்வம் (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வியிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் செல்வத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்