< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சென்னை
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
18 Oct 2022 2:15 PM IST

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ். கடந்த 2015-ம் ஆண்டு இவர், அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் மரிய ஞானராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ கோர்ட்டு நீதிபதி எம்.ராஜலட்சுமி, ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்