< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் கைது
|17 Sept 2023 2:31 AM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை சிந்தாமணிரோடு ராஜமான் நகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 28). இவர் 16 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் தைலம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் விசாரித்தனர். பின்னர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து சிறுமி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.