< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோவில் கைது
|14 Oct 2022 12:28 AM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோவில் கைது செய்யபட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 25). இவர் 16 வயது சிறுமி ஒருவரிடம் தான் உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். ஒரு செல்போனை அந்த சிறுமியிடம் கொடுத்து பேசுமாறு கூறியதாகவும், பேசமறுத்தால் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று கூறினாராம். மேலும் அச்சிறுமி எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.