< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; மளிகை கடைக்காரர் கைது
|12 Oct 2022 12:15 AM IST
பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தை சேர்ந்தவர் கனகராஜ் சாமுவேல் (வயது 43). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கனகராஜ் சாமுவேலை கைது செய்தனர்.