< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை  தந்தை கைது
ஈரோடு
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

தினத்தந்தி
|
20 July 2023 3:20 AM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டாா்

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை 49 வயது ஓட்டல் தொழிலாளி. இந்த நிலையில் இவர் தனது மகளுக்கு குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்