< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிரைவர் கைது
|28 Jan 2023 2:14 AM IST
நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே சீவலப்பேரி பொட்டல்நகரை சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் மகேஷ் (வயது 30). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.