< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; காவலாளி போக்சோவில் கைது
|13 May 2023 9:06 AM IST
சென்னை திருவொற்றியூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் கன்னியப்ப கிராமணி தெருவை சேர்ந்த 7 வயது சிறுமி தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள பால்ராஜ் என்பவரின் கட்டிடத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, அங்கு காவலாளியாக பணிபுரியும் மகேந்திரன் (வயது 35) என்பவர் அந்த சிறுமியை தூக்கி சென்று பாலியல் சிண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷிலா மேரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.