< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
2 July 2023 12:30 AM IST

கோவில்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமநாதன் மகன் காளிராஜ் (வயது 26), ஆண்டவன் மகன் பாண்டிச்செல்வம் (23), லட்சுமணன் மகன் பால்ராஜ் (35).

இவர்கள் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

3 வாலிபர்கள் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இதுதொடர்பாக காளிராஜ், பாண்டிச்செல்வம், பால்ராஜ் ஆகிய 3 பேரையும் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தார். பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்