< Back
மாநில செய்திகள்
3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது

தினத்தந்தி
|
15 July 2022 2:20 PM IST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வஞ்சூவாஞ்சேரி பகுதியை சேர்ந்த தமிழரசு (வயது 28) உடற்கல்லி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தமிழரசுவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்