< Back
மாநில செய்திகள்
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது..!
மாநில செய்திகள்

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது..!

தினத்தந்தி
|
9 Oct 2022 4:52 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 39 வயது கூலி தொழிலாளி. இவருக்கு 14 வயதில் மகள் ஒன்று உள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மனைவி வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு, அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் தந்தை அவருக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்