< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
|30 Nov 2022 6:09 PM IST
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (32) இவர் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. அதன்பேரில் முனியாண்டி மீது படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது செங்கல்பட்டு போக்சோ கோட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முனியாண்டிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். அரசு தாப்பில் வக்கீல் புவனேஷ்வரி ஆஜரானார்.