தஞ்சாவூர்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை; புத்தக கடை உரிமையாளர் கைது கடையை சூறையாடிய மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் உள்பட 3 பேரும் கைதானார்கள்
|தஞ்சையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புத்தககடை உரிமையாளரை போலீசார் கைது செய்த போலீசார், அந்த புத்தக கடையை சூறையாடிய மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
தஞ்சையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புத்தககடை உரிமையாளரை போலீசார் கைது செய்த போலீசார், அந்த புத்தக கடையை சூறையாடிய மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
புத்தக கடை
தஞ்சை மானம்புச்சாவடி பகுதியை சேர்ந்தவர் செய்யது ஜாகிர் உசேன் (வயது 56). இவர், தஞ்சை காந்திஜி சாலையில் புத்தக கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் பாபநாசம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று செய்யது ஜாகிர் உசேன், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாலியல் தொல்லை
இதனால் அந்த பெண் கடந்த சில நாட்களாக கடைக்கு செல்லவில்லை. இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினரான ஒரத்தநாடு அரசப்பட்டு பகுதியை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரரான வினோத் (30) என்பவர் அந்த பெண்ணிடம் ஏன் கடைக்கு வேலைக்கு செல்லவில்லை என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண், தான் வேலைபார்க்கும் கடை உரிமையாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், தவறான நோக்கத்துடன் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
கடையை சூறையாடினர்
இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் தனது நண்பர்களான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த தினேஷ்(21), அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த பாலாஜி(28) ஆகியோருடன் புத்தக கடைக்கு சென்று கடையை அடித்து நொறுக்கி சூறையாடினார்.
இதுகுறித்து செய்யது ஜாகிர் உசேன் மகன் மற்றும் அந்த பெண் ஆகியோர் தனித்தனியாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
4 பேர் கைது
இருதரப்பு புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், தினேஷ், பாலாஜி மற்றும் புத்தக கடை உரிமையாளர் செய்யது ஜாகிர் உசேன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.