கள்ளக்குறிச்சி
பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
|கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி பெண் குழந்தைகள் பொதுவெளி, குடும்பத்தில் அல்லது பள்ளியில் ஏற்படக்கூடிய பாலியல் தொந்தரவுகள் குறித்தும், அந்த பிரச்சினைகளிலிருந்து எப்படி தங்களை தற்காத்துக்கொள்வது, காவல்துறையை அணுகுவது, கல்வியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கிய அவர் காவல்துறையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள், கோப்புகள் மற்றும் தினசரி காவல்துறையின் செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்கி கூறினார்.
பாலியல் தொந்தரவு உள்ளதா?
இதைத் தொடர்ந்து பெண் போலீசார், சமூக நலதுறையினர், குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தினர் ஆகியோர் மாணவிகள் ஒவ்வொருவரிடமும் பொதுவெளி அல்லது பள்ளிகளில் ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சமூக நலத்துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தினர்,ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.