பாலியல் புகார் - மாநில மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ஆஜர்
|பாலியல் தொல்லை புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலிசார் இன்று செய்தனர்.
சென்னை,
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளதாகவும் குமரி தெரிவித்தார்.
இந்த நிலையில் மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இன்று நேரில் ஆஜராகியுள்ளார். ரேவதி ராமச்சந்திரனிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தி வருகிறார். மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநர் விளக்கம் அளித்து வருகிறார்.
புகார் குறித்த விளக்கம் முழுமையாக முடிந்த பின்னர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.