< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் மீது பாலியல் புகார்: எந்த வித புகாரையும் நான் அளிக்கவில்லை என சம்பந்தப்பட்ட மாணவி போலீசில் புகார்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

ஆசிரியர் மீது பாலியல் புகார்: எந்த வித புகாரையும் நான் அளிக்கவில்லை என சம்பந்தப்பட்ட மாணவி போலீசில் புகார்

தினத்தந்தி
|
25 March 2023 3:31 PM IST

கலாஷேத்ரா ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், திடீரென அந்த மாணவி, ஆசிரியர் மீது நான் குற்றச்சாட்டே முன்வைக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

சென்னை,

கலாஷேத்ரா ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், திடீரென அந்த மாணவி, ஆசிரியர் மீது நான் குற்றச்சாட்டே முன்வைக்கவில்லை என்று போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ராவின் ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்து இணையத்தில் பதிவுகள் பரவிய நிலையில், இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த புகார் மனு குறித்து விசாரிக்க சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டார். இதனிடையே சமூக வலைதளத்தில் பரவிய புகாரில் உள்ள மாணவி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எந்த விதமான புகாரையும் தான் முன்வைக்கவில்லை என்றும், ஆசிரியர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவர் அளித்திருக்கும் மனுவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்