< Back
மாநில செய்திகள்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

தினத்தந்தி
|
1 July 2022 11:53 PM IST

சோளிங்கரில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சோளிங்கர்

சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அந்தப் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் தபால் அலுவலக தெருவில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் வழிந்தோடுகிறது.

சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது.

கால்வாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்