< Back
மாநில செய்திகள்
வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
1 Sep 2023 7:43 AM GMT

வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடர்ந்து ஒரு மணி நேரம் மழைபெய்தது. இந்த மழையால் படப்பை- வண்டலூர் வாலாஜாபாத் 6 வழி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஆறுபோல் ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சாலையில் பள்ளம் எது? என தெரியாமல் பொதுமக்கள் அச்சத்திலே சென்றனர்.

லேசான மழை பெய்தாலும் வண்டலூர் வாலாஜாபாத் சாலை படப்பை பகுதியில் மழைநீர் ஆறுபோல் ஓடுகிறது.

மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் சேறும் சகதியுமாக உள்ளது. படப்பை பகுதியில் மழைநீர் செல்வதற்கு வடிகால் வசதி முறையாக அமைக்கப்படாமல் இருப்பதே மழைநீர் தேங்குவதற்கு காரணம்.

வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் படப்பை பகுதியில் வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நிரந்தரமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்