< Back
மாநில செய்திகள்
அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பு
கரூர்
மாநில செய்திகள்

அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பு

தினத்தந்தி
|
29 Sept 2023 12:31 AM IST

அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு அமராவதி ஆறு மற்றும் விஸ்வநாதபுரி, அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட 20-க்கும் மேலான கிராமங்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு அணையின் அருகே அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அமராவதி ஆற்றில் விடுவதாக புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், அழகாபுரி அணையில் இருந்து வெளியேறும் இந்த கழிவுநீரானது கரூர் செட்டிபாளையம் கதவணை பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கலந்து நுரை பொங்க காட்சியளிப்பதோடு, மாசுபட்ட தண்ணீர் நிறம் மாறி இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்