< Back
மாநில செய்திகள்
மீன்பிடி துறைமுகத்தில் கழிவுநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் கழிவுநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
15 July 2022 10:47 PM IST

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கழிவுநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள், 350 நாட்டுப்படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். துறைமுக வளாகத்தில் மீன்களை தரம் பிரித்தல், விற்பனை செய்தல், வலை பின்னுதல், வெளியூர்களுக்கு மீன்களை விற்பனைக்காக அனுப்பி வைத்தல், கருவாடு உலர வைத்தல், ஐஸ்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு உள்ள மீன் ஏலக்கூடத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி செல்வதற்கு கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வடிகால் தூர்ந்து கிடப்பதால், கழிவு நீர் வெளியேறாமல், தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.மழை பெய்தால் கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து தேங்கி விடுகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கழிவுநீர் வடிகாலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்